தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டனா சாலை சந்திப்பில் நேற்று மாலை தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தின் கேபிலை பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது பணியில் ஈடுபட்ட வேலையாட்கள் கவன குறைவால் அரூர் டவுன் பகுதிக்கு செல்லும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பைப்லைனை இரண்டு இடங்களில் உடைத்துவிட்டு சென்றுள்ளனர். அதன் பின் இரவு நேரத்தில் உடைக்கப்பட்ட 2 குழாயிலிருந்து தண்ணீர் வெளியே வந்துள்ளது. அப்போது பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் வீணாக சென்று சாலையின் இரு புறங்களிலும் ஆறாக ஓடியது. அப்போது சாலையின் இருபுறங்களிலும் சென்ற தண்ணீரில் பள்ளி மாணவர்கள் விளையாட்டாக நடந்து சென்றனர். அப்பகுதியில் ஒரு வாரத்திற்க்கு மேல் குடிநீரின்றி தவிப்புபதாகவும் இது போன்ற செயல் கண்டிக்கத்தக்கது பொதுமக்களிடையே பேசப்பட்டது.
des : More than an hour after the collapse of the Oakenakkal joint drinking water pipeline in the Aroor Concert stage, the river flowed into the river.