வேலூர் மாவட்டம்,திருப்பத்தூரில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு அனைத்து மதம் மொழி சமுதாய மக்கள் பாதிக்கப்படாத வகையில் அமைத்துகொள்ள அரசியல் சாசனம் அமைக்கப்பட்டது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை உரிமைகள் உள்ளது இஸ்லாமியர்காள் ஷரியத் சட்டத்தை பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இதில் எந்த திருத்தமுமில்லை அதில் ஒரு திருத்தம் கொண்டு வரும் போது மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது