தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலாத்துறை ,மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடி பெருக்கு விழா- வீடியோ

Oneindia Tamil 2019-08-07

Views 1

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடி பெருக்கு விழா மூன்றாம் தேதி துவங்கி நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்று 212 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். முன்னதாக இவ்விழாவில் பேசிய வெல்லமண்டி நடராஜன்; கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒகேனக்கலுக்கு ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆசியாவிலேயே சுற்றுலாவுக்கு உகந்த நாடு இந்திய நாடு என்றும் இந்தியாவிலேயே உகந்த மாநிலமாக தொடர்ந்து தமிழ்நாடு உள்ளது இவரைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்; ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு ஒகேனக்கல் தருமபுரி திருப்பத்தூர் வரையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக 13.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.44.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது . இவ்விழாவில் சார் ஆட்சியர் சிவனருள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக பாரம்பரியமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

DES : Audi Flour Festival on behalf of Tourism and District Administration

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS