கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் கிராமத்தில் மிக பழமை வாய்ந்த ஸ்ரீ பொன் அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது இதில் பொற்கலை பூரணி 154.ஆண்டு ஆடி மாத தெப்ப உற்சவ திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அதன் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது அப்போது வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருக்கோவில் குளத்தில் ஸ்ரீ பொன் ஐயனார் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தெப்பதில் அமர்ந்தபடி சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றப்படி திருக்குளத்தில் 5.முறை வலம்வந்து பதர்களுக்கு அருள் பாலித்தார் இதில் பண்ருட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .
DES : Arulmigu Sri Pon Iyanar Pokaralai Pooranee at Panrutti 154. Annual Teppa Festival