சேலத்தை அடுத்த ஓமலூர் ரயில்வே கிராசிங்கில் நாள்தோறும் பல பயணிகள் ரயிலும் மற்றும் கூட்ஸ் ரயில்களும் ஓமலூர் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்லும்.
இந்த ரயில்வே கிராசிங்கில் நிற்கும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விதிகளை மதிக்காமல் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்வார்கள். அதுபோன்று இன்று காலை 11 மணியவில் நெய்வேலியிலிருந்து மேட்டூர் தெர்மலுக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு கூட்ஸ் ரயிலானது ஓமலூர் ரயில்வே கிராசிங்கின் வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓமலூரிலிருந்து மேட்டூருக்கு சென்ற ஒரு நபர் விதியை மீறி ரயில்வே கிராசிங்கை கடக்க முயற்சித்தபோது அவரின் இரு சக்கர வாகனமானது எதிர்பாரா விதமாக ரயில்வே கிராசிங்கில் மாட்டிக்கொண்டது. இதைக் கண்ட ரயில் இன்ஜின் ஆப்பரேட்டர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதில் ஒரு ஆண் உட்பட இரண்டு பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சேலம் மேட்டூர் சாலையில் சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Karthik Subbaraj #dhanush