வெந்தயம் டீ சாப்பிடுவதால் குணமாகும் நோய்கள் மற்றும் பயன்கள் பற்றி ஜோஷியர்வெற்றிவடிவேல்
இந்த வீடியோவில் சொல்கிறார், அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்
*வெந்தயம்*
வெந்த+அயம்
அயம் என்றால் *இரும்பு*
உடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது *வெந்தயம்*
சூடா *வெந்தய_டீ குடிச்சா என்னென்ன நன்மைகள்...*
வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள்.
எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை.
அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம்.
அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியம் என பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.
அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது.
*சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள்* என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.
அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும் வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உணவில் சேர்ப்பது என நீங்கள் செய்திருப்பீர்கள்.
*வெந்தயத்_தேநீரை குடிப்பதால் வரும் நன்மைகள்.*
*தயாரிக்கும் முறை*
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் #வெந்தயத்தை சிறிது சேர்த்து,
மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி,
*தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்*
வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :
*குடலை_சுத்தமாக்க :*
குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.
நச்சுக்களை உடலில் தங்க விடாது.
*ரத்தசோகை_போக்க*
இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள்.
*மன அழுத்தம்* காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்களுக்கு இந்த வெந்தய_டீ அருமருந்தாகிறது.
*மாதவிடாய் வலிக்கு :*
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும்.
அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும்.
இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
*டீன் ஏஜ் பெண்கள் :*
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது.
இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.
பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.
*தாய்ப்பால் அதிகரிக்க :*
முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது.
தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.
*கொழுப்பு கரைய :*
கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள்.
இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும்.
மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.
*மலச்சிக்கல் :*
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும்.
நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால்,
அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.
*உடல் எடைக்கு :*
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது.