"நான் அமைச்சரின் செருப்பைக் கழற்றி விடுவதை எல்லாருமே வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.. இதை எல்லா டிவிகளிலும் ஒளிபரப்பினார்கள்.. நான் பெருத்த அவமானத்துக்கு உள்ளானேன்.. அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என பழங்குடியின சிறுவன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசில் புகார் தந்திருந்தார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிறுவன், அவரது தாய் உள்ளிட்டோரை அமைச்சர் நேரில் வரவழைத்து வருத்தம் தெரிவித்தார்.. இதையடுத்து அமைச்சர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக சிறுவனின் தாயார் கூறியுள்ளார்.
Read more at: https://tamil.oneindia.com/news/nilgiris/tribal-boy-complaint-against-minister-dindigul-srinivasan-376395.html