இலங்கையில் மிக கடுமையான கொரோனா நெருக்கடிகளுக்கு இடையே ஆகஸ்ட் 5-ந் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அத்தனை எதிர்க்கட்சிகளும் ஆளுக்கு ஒரு திசையில் நெல்லிக்காய் மூட்டை போல சிதறிக் கிடப்பதால் சர்வ வல்லமையுடன் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராவது உறுதியாகி இருக்கிறது. அப்படி ராஜபக்சே மீண்டும் பிரதமராவது என்பதில் இந்தியாவுக்கு மிகப் பெரிய நெருக்கடிகள் காத்திருக்கின்றன என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
In Sri Lanka Parliament Elections on Aug 5, Mahinda Rajapaksa will Create Record with staying power
#MahindaRajapaksa
#srilanka