கிராமப்புறத்துப் பள்ளி மாணவிகள், வளரிளம் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்டது. அத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவிக்கும் ஆண்டுக்கு 18 பாக்கெட் நாப்கின்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஆறு நாப்கின்கள் இருக்கும். ஒவ்வொரு பள்ளியிலும் நாப்கின் வழங்கும் இயந்திரம் ஒன்றும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை அப்புறப்படுத்த எரிசூளையும் (masonry choolas) இருக்கும். 3,200 அரசுப் பள்ளிகளில் எரிசூளைகள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. மாதவிடாய்க்கால சுகாதாரமின்மை, கிருமித்தொற்று போன்ற காரணங்களால் ஏற்படும் நோய்கள் தடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், மாணவிகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு, தரமான நாப்கின்களை முறையாக உரிய காலத்தில் வழங்க வேண்டும். ‘இது அம்மாவின் அரசு’ என்று மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்லிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, பெண்களின் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டத்தை ஏனோதானோவெனச் செயல்படுத்துவது, அவருக்குச் செய்யும் துரோகம்.
CREDITS
Host - Deepti | Script - Gunavathi, Athirai, Ganesh, Balasubramani | Camera - Saran | Edit - Sundarmathi
Subscribe : https://goo.gl/wVkvNp The Imperfect show: https://goo.gl/W43MMM JV Breaks: https://goo.gl/jMx49S Daily Bytes: https://goo.gl/7s3axi Jai Ki Baat: https://goo.gl/idKZvD