காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணத்தை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட பல்வேறு விவசாய நலன் சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என்கிறார்கள் தமிழக விவசாயிகள். தொடர்ப் போராட்டத்தை, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது. நாட்கள் 20 கடந்தாலும் போராட்டத்தில் வலிமையை இழக்காமல் ஒவ்வொரு நாளும் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள்.