மூச்சு வாங்க தேர்வறைக்குள் நுழைந்த 18 வயது மாணவியால், எப்படி தேர்வை நல்ல முறையில் எழுதியிருக்க முடியும்? பயங்கர அனுபவத்தையையும் அவஸ்தையையும் சந்தித்த அந்த மாணவி தனது பெயரைக் கூறவோ... முகத்தைக் காட்டவோ விரும்பவில்லை. சம்பவம் நடந்தது கேரளத்தின் கண்ணூரில். எதற்கெடுத்தாலும் மனிதஉரிமை பற்றி பேசும் நகரம் இது.