அமெரிக்கா போகும் முன்பும், போன பிறகும்கூட கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையைச் சந்திப்போம், அவர்கிட்ட பேசுவோம்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கல. ஆனா நடந்த விஷயம் எல்லாமே கனவுமாதிரிதான் இருக்கிறது' என நெகிழ்ச்சியாகப் பேசும் லட்சுமி, மதுரையைச் சேர்ந்த ஆசிரியை. தன் மகன் வேலை செய்யும் அமெரிக்காவிலுள்ள கூகுள் தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருந்தவர், அங்கு சுந்தர் பிச்சையை சந்தித்து புகைப்படமும் எடுத்திருக்கிறார். உற்சாகத்துடன் அவரை சந்தித்துப் பேசிய தருணத்தைப் பகிர்கிறார்.