கோடை வெயில் வாட்டிவதைத்துவந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் கொளுத்தி எடுத்த வெயில், சற்று குளிர்ந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.