நீடாமங்கலம், பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மராஜ். மெக்கானிக். இவரின் மனைவி சுமதி. இவர்கள் இருவரும் இன்றுகாலை பொருள்கள் வாங்குவதற்காக நீடாமங்கலத்துக்கு வந்தனர். அண்ணாசிலை அருகே வரும்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தர்மராஜ், கத்தியை எடுத்து சுமதியின் கழுத்தை அறுத்தார். இதனால் நிலைதடுமாறிய சுமதி, நடுரோட்டில் அங்கும் இங்கும் ஓட முயன்றார். ஆனால், தர்மராஜ், விடாமல் கொடூரமாகச் சுமதியின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டார்.
women brutally killed by her husband