பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் சார்லஸ் - டயானா தம்பதியின் இளைய மகனான பிரின்ஸ் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமணம், மே 19-ம் தேதி அரச குடும்பத்துக்குச் சொந்தமான `தி வின்சர் கேஸில்' எனும் கோட்டையில் உள்ள St.George's Chapel ஆலயத்தினுள் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்வுக்குச் சுமார் 250 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமான திருமண நிகழ்வைவிட அரச குடும்பத்தின் நிகழ்வுக்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வகையில், முதலில் Duke and Duchess of Sussex என்று ஹாரி மற்றும் மார்க்கிலுக்கு மகுடம் சூட்டப்பட்டு, பிறகு தங்களின் உறுதிமொழியை ஏற்று, மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
the royal wedding of prince harry and megan markle