சென்னையைச் சேர்ந்தவர் கலையரசன். டிக்டொக் (Tiktok) செயலியைப் பயன்படுத்துவோருக்கு கலை பரிட்சயம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கலையரசன் பொழுதுபோக்குக்காக டிக்டொக் செயலியில் பெண்களைப் போன்று நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். பல பதிவுகளில் இவரின் முக பாவனைகள், பேச்சு போன்றவை பெண்மையை வெளிப்படுத்துவதாக இருந்தது. இவரது வீடியோக்களுக்கும் லைக்குகள் ஒரு பக்கம் குவிந்த வண்ணம் இருந்தாலும். மோசமான அச்சில் ஏற்றத்தகாத சொற்களால் சிலர் விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.