மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் இந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ஹீரோ கதிரின் நடிப்பையும், படத்தின் வசனத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் சமூகவலைதள மக்கள். இந்த நிலையில், நடிகர் கதிருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.
#thalapathyvijay #actorvijay #pp