``அந்தச் சிலை கர்நாடக அரசுக்காகக் கூட எடுத்துச் செல்லப்படவில்லை. ஒரு தனியார் நிறுவனத்துக்காக மரங்களை வெட்டிக் குவிக்கிறார்கள். பாரபட்சம் பாராமல் கிரிவலப்பாதை மரங்களை வெட்டி அகற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாமே பல வருடங்களான விலையுயர்ந்த மரங்கள். மரங்களை வெட்டிக் கொண்டுபோகும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா அந்தச் சிலை?"