சென்னை பூந்தமல்லியில் 45 அடி கிணற்றுக்குள் ஒன்றரை வயது பேத்தி விழுந்ததைப் பார்த்த அவரின் பாட்டி எதையும் யோசிக்காமல் துணிச்சலாகக் கிணற்றுக்குள் குதித்து பேத்தியைக் காப்பாற்றியுள்ளார். இதனால் இருவரும் உயிரோடு மீட்கப்பட்டனர். சூப்பர் பாட்டியால் ஒன்றரை வயது குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.