தாய் பாசத்தை விஞ்சியது எதும் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் துருக்கியில் ,ஒரு பூனை உடல்நிலை சரியில்லாத தனது குட்டியை தானாகவே மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு வந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தபோது அங்கு தனது குட்டியை கவ்வி கொண்டு வந்த பூனை, அதை அவர்களின் அருகில் போட்டுவிட்டு அமைதியாக நின்றது. இதனைக்கண்ட மருத்துவர்கள் உடனடியாக அப்பூனைக்கு சிகிச்சை அளித்தனர்.பூனையை பரிசோதிப்பதற்காக வெவ்வேறு அறைக்கு எடுத்து சென்ற போதிலும் தாய் பூனை சுற்றிசுற்றி வந்து குட்டியை தன் கண் பார்வையிலேயே வைத்துக்கொண்டது.
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India