சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி, தள்ளுவண்டி மூலம் விற்ற வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த வியாபாரி குடியிருக்கும் தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. சென்னையைப் பொறுத்தவரை கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்து அதிக அளவில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டை தற்காலிகமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த மார்க்கெட்டை திருமழிசைக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் திருமழிசையில் மார்க்கெட் செயல்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு கோயம்பேடு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
CREDITS - எஸ்.மகேஷ்
CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India