சொந்த ஊரான மானந்தவாடியில் 45,000 சதுர அடியில் கட்டிய வீட்டில் ஒரு மாத காலம் மட்டுமே வாழ்ந்த, ஜாய் அரக்கல் தற்கொலை செய்துகொண்டது வயநாடு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜாய் அரக்கல் துபாயில் தற்கொலை செய்து கொண்டார். வயநாடு மாவட்டம் மானந்தவாடியைச் சேர்ந்தவர் ஜாய் அரக்கல் . துபாயில் அக்கவுன்டன்ட்டாகப் பணிபுரிந்த இவர், இன்னோவா குரூப் நிறுவனங்களைத் தொடங்கினார். இந்தக் குழுமம் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், கப்பல் போக்குவரத்து, கட்டுமானம் போன்ற துறைகளில் தொழில் செய்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த பலருக்கும் துபாயில் தன் நிறுவனத்தில் ஜாய் அரக்கல் வேலைவாய்ப்பு வழங்கினார்.
CREDITS - எம்.குமரேசன்
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India