ஓவர்நைட்டில் உலகமுழுக்க Viral ஆன Dhoni ! என்ன காரணம் ? | Namma Thala Dhoni | Episode 7

NewsSense 2020-11-06

Views 1

Dhoni's Mom Got Excited
இந்திய தேர்வுக்குழு ஆணையம் வங்கதேச சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்த பட்டியலை பிரஸ் மீட்டில் வெளியிட்டது. சச்சின் டிராவிட், கங்குலி, சேவாக், யுவராஜ், கைப், பதான் ஆகியோரோடு தோனியின் பெயரும் இருந்தது. நியூஸ் பிளாஷில் தோனியின் பெயரும் வந்தது.

Dhoni's Reaction After Tsunami
முதல் போட்டியிலியே டக் ஆனதால் தோனிக்கு மனசு சரியில்லை. அன்றைய தினம் தனியாகவே உட்கார்ந்திருந்தார். ஒரு நாள் இடைவேளையில் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டிய நிலை. 26 டிசம்பர் 2004 அன்று தான் இந்தியாவும் வங்கதேசமும் இரண்டாவது போட்டியில் மோதவிருந்தன. இந்த நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துயரமான சுனாமி அன்று காலை தான் வந்தது. தமிழக கடலோர பகுதிகள் அனைத்தும் பயங்கரமாக பாதிக்கப்பட்டு இருந்தன. நாடே பதறியது. இந்திய வீரர்கள் கண் விழித்து விஷயம் கேள்விப்பட்டவுடன் கண் கலங்கினர்.உறங்கி கொண்டிருந்த தோனியை எழுப்பினார் யுவராஜ் சிங்.

Dhoni Became Viral In A Day
வெறும் 46 ஓவர்ல 298 சேஸ் செய்தது இந்தியா. 145 பந்தில் 15 பவுன்டரி, 10 சிக்ஸர் விளாசி 183 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக இருந்தார் . அடப்பாவிகளா இலங்கை இன்னும் கொஞ்சம் ரன் கூட எடுத்திருந்தா ஒருதின போட்டியில் முதல் முறையா இரட்டை சதம் அடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காராய் இருந்திருப்பார் தோனி என ரசிகர்கள். அந்த மேட்ச்க்கு பிறகு தோனியின் கேரியர் வேற லெவலுக்கு போச்சு.

Where Did Dhoni Play His First Test Match ?
சென்னையில் இருக்கும் எம்.ஏ.எம் சிதம்பரம் ஸ்டேடியத்துக்கும் சரி, தமிழ்நாட்டுக்கும் சரி பிற்காலத்தில் தோனி அங்க தான் பெரிய ஹீரோவாக போறார்னு தெரியாது . தோனிக்கும் தந்து பிறந்த மாநிலத்தை விடவும் கடவுளா நினைச்சு வழிபடக்கூடிய அன்பான ரசிகர்கள் தமிழ்நாட்டில் உருவாக போறாங்கனு தெரியாது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS