Meenakshi Arts & Science College for Women, K.K.Nagar, Chennai - http://www.maher.ac.in/
Reporter - தினேஷ் ராமையா
``18 முறை போன் செய்தபோது சிக்காத மண்டா, ஸ்கைப் வீடியோ காலில் சிக்கினார். ஸ்கைப் ஐ.டி-யைவைத்து அவரது செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்தோம். அந்த எண்ணைவைத்து சிறுவனைக் கடத்தியது மண்டா என்பதைக் கண்டுபிடித்தோம்.’’
தெலங்கானா மாநிலம், மகபூபாபாத் நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித் ரெட்டி. லோக்கல் டி.வி சேனல் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். இவரின் மகன் தீக்ஷித் ரெட்டி. வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த தீக்ஷித், கடந்த 18-ம் தேதி மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய ரஞ்சித் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.