நிவர் புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி - வீடியோ

Oneindia Tamil 2020-11-24

Views 17.5K

புதுச்சேரி:

நிவர் புயல் எதிரொலி: பிரதமர் மோடி புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனை.

‘நிவர்’ புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக ‘நிவர்’ நாளை கரையைக் கடக்க உள்ளது. காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘நிவர்’ புயல் நெருங்கி வரும் நிலையில் புதுச்சேரி துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக பொதுமக்கள், மீனவர்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துறைமுகம் வழியாகவோ அல்லது அதன் அருகிலோ புயல் கரையை கடக்கலாம் என்பதே 7ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் விளக்கம் ஆகும்

நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை தொலைபேசியில் தொடர்புகொணாடு ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் எனவும் பிரதமர் மோடி முதலமைச்சர் நாராயணசாமியிடம் உறுதி அளித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS