திருச்சி மாவட்ட கோயில்கள், பகுதி - 2
தமிழ் நாட்டின் மையப்பகுதியான திருச்சிராப்பள்ளியில் உள்ள புகழ் பெற்ற கோயில்களின் தொகுப்பு.
மூலவர் மண்புற்றாக உள்ள எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவரம்பூர் என்னும் திரு எறும்பியூர்.
108 வைணவ தலங்களில் இரண்டாவது தலமான உறையூர் நாச்சியார் கோயில்.
மதம் பிடித்த பட்டத்து யானையை இறைவன் கோழி உருவில் வந்து அடக்கிய தலம், உறையூர் பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில்.
1800 ஆண்டுகள் பழமையான, மலை ஏற முடியாத சோழ ராணிக்கு லிங்க வடிவில் காட்சியளித்த தாயுமானவர், உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்.
அக்னி வழிப்பட்ட ஆதிநாதர் அக்னீஸ்வரரை, வள்ளி தெய்வானையுடன் பூசிக்கும் முருகப்பெருமான் அருளும் வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
பிட்சாடனராய் சென்று தருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அருள் புரிந்த திருப்பராய் வளை தாருகாவனேஸ்வரர் திருக்கோயில்.
உலக உயிர்களை உய்விக்க அருள் புரியும் உய்யக்கொண்டான் திருமலை, உஜ்ஜீவநாதர் திருக்கோயில்.
Trichy in temples