டிக்டாக், ஹலோ செயலிகளை உருவாக்கிய சீன நிறுவனமான பைட்டான்ஸ், தனது இந்திய தொழில் பிரிவை மூடுவதாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, சீனாவின் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடைவிதித்தது. இந்நிலையில், டிக்டாக், ஹலோ செயலிகளை உருவாக்கிய சீன சமூக ஊடக நிறுவனமான பைட்டான்ஸ், அதன் இந்திய தொழில் பிரிவை மூடுவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு சட்டங்கள், விதிகளுக்கு உள்பட்டு தங்கள் நிறுவனம் நடந்தபோதும், அரசின் கட்டுப்பாடு தொடரும் நிலையில் இந்தியப் பிரிவை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் அந்நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 2 ஆயிரம் பேரின் வேலை கேள்விக்குறியாகி உள்ளது.