தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் 55 வேட்பாளர்ககள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்ஜிகவுதம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல்கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், பகுஜன் சமாஜ் கட்சியின் 55 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.