பனங்காட்டு படை கட்சி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஹரி நாடாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கட்சியின் நிறுவனத்தலைவர் ராக்கெட் ராஜா ஞாயிற்றுக்கிழமை மாலை ஹெலிகாப்டரில் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் தரை இறங்குவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.