தேசிய மீன்வள கொள்கை வரைவு 2020 திரும்பப் பெற வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட மீன்வளத்துறை அவர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் கோரிக்கை முழக்க பேரணி நடைபெற்றது
விருதுநகர் எம்ஜிஆர் சிலை முன்பு இருந்து மீனவ தொழிலாளர்களின் மாபெரும் கோரிக்கை பேரணி தமிழ்நாடு ஏஐடியுசிமீனவர் தொழிலாளர் சங்கம் சார்பில் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது இந்த பேரணியின் போதுமத்திய அரசு கொண்டு வந்த மீன் வளத்தையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடிய தேசிய மீன்வள கொள்கை வரைவு 2020 திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் மீன் வளத்தையும் மீனவர்களையும் பாதுகாத்திட இம்மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடத்த வேண்டும் என்றும்., மீனவ தொழில்புரியும் அனைவரையும் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும் என்றும் 60 வயதான மீனவர் தொழிலாளர்களுக்கு மீன்வளத்துறை மூலம் மாதம் மாதம் ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்க பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி எம்ஜிஆர் சிலை முன்பு தொடங்கி மெயின் பஜார் வழியாக மார்க்கெட் தேசபந்து மைதானம் மற்றும் பழைய பேருந்து நிலையம் சென்று விருதுநகர் மாவட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் முன்பு முடிவுற்றது. மேலும் இந்த பேரணியில் மாவட்ட செயலாளர் லிங்கம் , மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி , மாநில குழு உறுப்பினர் _ பாலமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் பழநிக்கு மார், மாவட்ட குழு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்