ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேரை வடம்பிடிக்க பக்தர்களின்றி கோயில் வளாகத்திலேயே தங்கத்தேரோட்டம்

boominews 2021-08-11

Views 11

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீ ஆண்டாள் கோயில் திரு ஆடிப்பூர தேரோட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேரை வடம்பிடிக்க பக்தர்களின்றி கோயில் வளாகத்திலேயே தங்கத்தேரோட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் நடைபெற்ற திருஆடிப்பூர தேரோட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி ,பட்டர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மற்றும் கலந்து கொண்டு கோவிந்தா,கோபாலா கோஷச்சத்துடன் கோயில் பிரகாரத்தில் தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா ஆடி மாதத்தில் நடக்கும்.ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும்.மொத்தம் பத்து நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் கடந்த 7 ஆம் தேதி கருடசேவையும் 9 ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. தற்போது கொரோணா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தளங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுபாடுகள் விதிக்கபட்டு வருகிறது. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோவில் விழாக்கள் தடையின்றி நடக்க தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆடிப்பூர விழா இன்று 9 ஆம் நாளை எட்டியுள்ளது.வழக்கமாக திரு ஆடி பூரம் தேரோட்டத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். தற்போது கொரோனாவை கட்டுபடுத்தும் விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோவில் வளாகத்திற்க்கு உள்ளே நடைபெற்ற தங்கத்தேரோட்டம் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் எழுந்தருள திருக்கோயில் பட்டர்கள்,மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி,அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டு கோவிந்தா கோபாலா என கோஷம் எழுப்பி தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கடந்த ஆண்டும் இதை போல் விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்குள்ளே பக்தர்கள் இன்றி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடதக்கது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS