கரூரில் இன்று தடுப்பூசி செலுத்தும் முகாமில் 7 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பலருக்கு தடுப்பூசி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்
கரூரில் கடந்த 5 நாட்களாக தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கின முன்னதாக பொதுமக்கள் அதிகாலை முதல் காத்திருந்த பலருக்கு தடுப்பூசி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் கரூரில் இன்று மட்டும் 17 மையங்கள் அமைக்கப்பட்டு 6800 நபர்களுக்கு கோவிக்சில்டூ தடுப்பூசி செலுத்தப்பட்டது இதன் ஒரு பகுதியாக கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிகாலை 4 மணி முதல் 7 மணி நேரமாக காத்திருந்த நிலையில் பலருக்கு தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் மேலும் 400 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவித்திருந்த நிலையில் போலீசார் கதவுகளை பூட்டி இருந்த நிலையில் பொதுமக்கள் 400 நபர்களுக்கு குறைவான நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துவதாக புகார் தெரிவித்து நிலையில் பொதுமக்கள் அதனை மீறி உள்ளே நுழைந்து ஓடி சென்று வரிசையாக நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டத்தில் இன்று வரை 3 லட்சத்து 31 ஆயிரத்து 972 நபர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.