திருவள்ளூர் : 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 ஆயிரம் பனை விதைகளை ஏரிக்கரைகளில் நடும் பணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பனை மரங்களை யாரும் வெட்டக் கூடாது என்றும் வருவாய்த்துறை மூலம்கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்...
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஏரியின் கரைகளில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்., 75 ஆயிரம் பனை விதைகளை
ஸ்வாட் தனியார் சமூகபணி அமைப்பின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளின் கரையாரங்களில் விதைக்கும் நிகழ்வை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து துவக்கி வைத்தார். பின்னர் சமூகப்பணி அமைப்பு குழு சார்பில் புதிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பனை மரங்களை வெட்டுவதாக மாவட்டத்தில் பல்வேறு புகார்கள் வருவதாகவும் வருவாய்த்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு உரிய அபராதம் விதிக்கப்படும் எனவும் பனை மரங்களை யாரும் வெட்டக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்...
பேட்டி : திரு ஆல் பி ஜான் வர்கீஸ் திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர்