விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள படந்தால் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு 6 தங்கம் 6 வெள்ளி உள்ளிட்ட 14 பதக்கங்களை வென்று சாதனை படைத்து திரும்பிய மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் சாத்தூர் ரயில்வே நிலையத்தில் வரவேற்பு கொடுத்தனர். சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தில் சக்கர வியூகம் கராத்தே மற்றும் சிலம்பம் விளையாட்டு கலைக்கூடம் சார்பில் பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது இப்பள்ளியில் மாஸ்டர் ஹரிஹர செல்வம் தலைமையிலான 14 பேர் கொண்ட குழு தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 11, 12, 13, ஆகிய தேதிகளில் இமாச்சல் பிரதேசத்தில் மணாலி பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நாடு முழுவதும் உள்ள அப்பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்களைச் சேர்ந்த குழுவினர் பங்குபெற்றனர். தமிழகம் சார்பாக சாத்தூரில் உள்ள சக்கரவியூகம் கராத்தே மற்றும் சிலம்பம் குழுவினர் பங்குபெற்று பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட பல மாநில போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெற்றி பதக்கங்களை பெற்றனர் இதில் குறிப்பிடும் படியாக 6 தங்கம் 6 வெள்ளி 2 வெண்கலம் உட்பட 14 பதக்கங்களைப் பெற்று சிறந்த குழுவிற்கான சிறப்பு பரிசையும் பெற்று வென்று வந்தது இவர்கள் சாத்தூர் ரயில் நிலையம் வந்து இறங்கிய போது அவர்களது பெற்றோர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர். தமிழகம் சார்பில் பல்வேறு பதக்கங்களை வென்று வந்த சிறுவர்கள் இப்பகுதிக்கு பெருமை சேர்ப்பதாக அவர்களது பெற்றோர்கள் தெரிவித்தனர்.
பேட்டி : 1. ஹரிகர செல்வம் - பயிற்சியாளர்
2. ஸ்ரீதரன் - பள்ளி மாணவன்
3. ரேவதி - பெற்றோர்