தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 34 செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்களில் தரமற்ற செயற்கை மணல் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 10 இடங்களில் பொதுப்பணித்துறை அனுமதி இல்லாமல் எம்.சாண்ட் மண் அள்ளப்படுவதாகவும், ஆகவே அதனை தடுத்து நிறுத்தக்கோரி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தலைவர் செல்ல ராஜாமணி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து செய்தியாளர்களுக்கு பேட்டி.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் அதன் தலைவர் செல்ல ராஜாமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது., கரூர் மாவட்டத்தில் உள்ள 34 செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்களும், பொதுப்பணித்துறையிடமிருந்து தரச்சான்றிதழ் பெற்றும் , பொதுப்பணித்துறையிடமிருந்து அனுமதி பெறாமல் 10 க்கும் மேற்பட்ட செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகிறது . இந்த நிறுவனங்கள் விதிமுறைகளின்படி செயல்படாமல் முறைகேடாக தரமற்ற செயற்கை மணலை உற்பத்தி செய்தும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக உற்பத்தி செய்தும் , குவாரிகளில் அதிக சக்திவாய்ந்த வெடிகளை பயன்படுத்தி வருகின்றன என்றும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் 100 அடி ஆழம் வரை கற்களை வெட்டி எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பாரம் ஏற்றி விட்டு குறைந்த பணத்திற்கு மட்டுமே வரி கட்டுவதால் அரசுக்கு தினசரி கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும். குவாரி உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து , மேற்படி குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் முடங்கிப்போய் உள்ள தனியார் மற்றும் அரசு கட்டுமானப் பணிகள் தொடர்ந்து தங்கு தடையின்றி நடைபெறவும் , மாட்டு வண்டி தொழிலாளர்கள் , மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் , தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை இயக்கிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டி : செல்ல ராஜாமணி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்