சகல தோஷங்களையும் பொசுக்கவல்லது பிரதோஷ வழிபாடு. சிவ பெருமானுக்கே உரிய இந்த வைபவத்தில் பிள்ளையார் பெருமானும் மிகச் சிறப்பாக பூஜிக்கப்படுகிறார் ஓர் ஆலயத்தில். இந்தக் கோயிலின் சிறப்பையும் அங்கு செய்யப்படும் பிரார்த்தனை தேங்காய் வழிபாடு குறித்தும் விளக்குகிறது இந்த வீடியோ.
எப்படிச் செல்வது? தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும், ஏரலிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் உள்ளது ஆறுமுகமங்கலம். பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது. இந்தக் கோயில் காலையில் 6:30 முதல் 12 மணி வரையிலும்; மாலையில் 5.30 முதல் 8.30 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும்.