கரூர் : 72 மணி நேரம் கை குலுக்கல் உலக சாதனை நிகழ்ச்சி தொடக்கம் 30 மணி நேரம் தாண்டியது - தாய், மகள் இணைந்து, 72 மணி நேரம் கை குலுக்கும் நிகழ்ச்சி கரூரில் தொடங்கியுள்ளது.
கரூர் நகரத்தார் சங்கக் கட்டடத்தில், 72 மணி நேரம் தொடர்ந்து கை குலுக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியினை, கருவூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழநியப்பன் தொடங்கி வைத்தார். நேற்று காலை 11:00 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி வரும், 25 ம் தேதி காலை, 11:00 மணி வரை நடைபெற உள்ளது. கரூர் அடுத்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீதர்ஷினி, அவரது தாய் பத்மாவதி ஆகியோர், ஆசியா புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில், 72 மணி நேரம் தொடர்ந்து கைகுலுக்கி வருகின்றனர். வாசிப்பு பழக்கம் வளரவும், குடும்ப உறவுகள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இந்த சாதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆசியா புக் ஆப் ரெக்கார்டு நடுவர்களாக ஹரீஷ் மற்றும் தினேஷ்குமார் உள்ளனர். இன்று 23 ம் தேதி மாலை 7 மணியளவில் 30 மணி நேரம் தாண்டிய இந்நிகழ்ச்சியில் சமூக நல ஆர்வலர்கள், அரிமாசங்கங்கள் ஆகியோர் மட்டுமல்லாமல், ஏராளமானோர் வாழ்த்தி வருகின்றனர்.
பேட்டி : மேலை பழநியப்பன் - கருவூர் திருக்குறள் பேரவை