மக்களை மிரட்டி வாக்கு கேட்பது தவறான செயல்
இது ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகாரா நாடா ? நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என் சட்டையை பிடித்து கேள்வி கேளுங்கள் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் பரப்புரையில் பேச்சு
ஈரோடு மாவட்டம்., கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூடக்கரை ஊராட்சி மன்ற தலைவர் பதவி க்கு போட்டியிடும் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தங்கராசு ஆகியோரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்களிடம் பேசுகையில்., கூடக்கரை ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுக ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஓட்டுப்போட்டால் எதுவும் நடக்காது என்று மக்களை மிரட்டி வருகின்றனர். இது ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா ? மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். மக்கள் பிரச்சனைகளை சட்ட மன்றத்தில் குரல் எழுப்பி பிரச்சனைகளை எங்களால் தீர்க்கமுடியும். இந்த ஊராட்சி தேர்தலில் நாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை மூன்று மாத்தில் நிறைவேற்ற வில்லையெனில் எனது சட்டையை புடித்து கேளுங்கள் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பொதுமக்கள் முன்னிலையில் உணர்ச்சி்பொங்க பேசி வாக்கு சேகரித்தார்.