கரூர் நகரில் உள்ள மேட்டுத்தெரு பெருமாள் ஆலயத்தின் அருகே சமர்த்த சத்குரு ஷீரடி ஸ்ரீ சாயிபாபா 103 வது மஹா சமாதி ஆராதனை விழா நிகழ்ச்சி காலையில் ஆரத்தியில் தொடங்கி, கோ பூஜை, கொடியேற்றம், அனுக்ஞை, மகா கணபதி பூஜையும், புண்ணியஹவாஜனம் நிகழ்ச்சியும் கலசங்களின் தேவதா ஆவாஹனம், பூஜையும், வேதபாராயணம், தூப, தீப, தீப நெய்வேத்தியம், மஹா தீபாராதனை நிகழ்ச்சியும், வேதபாராயணம், சகஸ்கரநாமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சாய் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ சாய் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் சாய்பாபா ஆலயக்கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.