தீபாவளியான நேற்று (04.11.2021) கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா எனும் பெண், ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது அவர், தான் ஜெயலலிதாவின் மகள் என்று தெரிவித்தார். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தீபாவளியான இன்று எங்க அம்மாவின் ஆசிர்வாதம் வாங்க வந்தேன். ஆனால், என்னை உள்ளே விடவில்லை. என்னுடைய சொந்த ஊர் மைசூர். இங்கு பல்லாவரத்தில் தங்கியிருக்கிறேன். என்னை எல்லாருக்கும் தெரியும்” என்றார். மேலும் அவரிடம் செய்தியாளர்கள், இவ்வளவு தினங்கள் இல்லாமல் ஏன் இன்று என்று கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த அவர், “அது சில காரணங்கள் இருக்கு” என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
Prema Speech
#Prema
#JayalalithaDaughter
#Sasikala
#Jayalalitha