கிராமங்களை விட்டுப் பெருநகரங்களுக்கு வேலைக்குச் சென்ற இளைஞர்களில் பலர், தற்போது தங்களது வேர்களான கிராமங்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இருக்கிறார் விஷ்ணு மனோகரன்.
எம்.எஸ்ஸி, பயோடெக்னாலஜி முடித்துவிட்டு, சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார். ஒரு கட்டத்தில் அதைத் துறந்துவிட்டு, கடந்த 10 வருடங்களாகச் சொந்த ஊரில் இயற்கை விவசாயம், தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். கரூர் நகரத்தையொட்டி இருக்கும் செட்டிப்பாளையத்தில் இருக்கிறது அவரது பண்ணை. தன் அனுபவங்களை இந்த காணொளியில் விளக்குகிறார்...