கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக வருஷாபிஷேகத்தினை முன்னிட்டு பஞ்சமூர்த்தி வீதி உலா நிகழ்ச்சி – அலங்கரிக்கப்பட்ட வெள்ளி வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தார்
கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு இதே நாளில் நடைபெற்றதையடுத்து, கரூர் கல்யாண பசுபதீஸ்வர்ர் ஆலய வருஷாபிஷேக நிகழ்ச்சியும், இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தொடக்க விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைமுன்னிட்டு, பஞ்சமூர்த்திகளான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயாகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்திலும், முன்னதாக ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆகியோர் திருவீதி உலா வந்தனர். இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையினரும் சிறப்பாக செய்திருந்தனர். ஏற்கனவே, கொரோனா காலக்கட்டம் என்பதினால் திருவீதி உலா, சூரசம்ஹாரம் உள்ளிட்ட ஆன்மீக விஷேச நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாத நிலையில், தற்போது நடைபெற்ற இந்த திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடவுள் அருள் பெற்றனர்.