மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்கக் ஆடு மாடுகளை குளிப்பாட்ட செல்ல வேண்டாம், மாவட்ட ஆட்சியர் பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் ஆறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும், ஆறுகளில் அடைப்புகள் ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் வீடுகளில் ஆதார் கார்டு ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய பொருட்களை தண்ணீர் புகாத பாலிதின் பைகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளில் குளிக்கவும் ஆடுமாடுகளை குளிப்பாட்டவும் செல்ல வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார். தற்போது பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கணக்கெடுப்பு நடத்தி வருவதாகவும், மழை நின்ற பின்பு முழுமையான பாதிப்பு தெரியவரும் என்றும், தெரிவித்தார். நாளை நடைபெற உள்ள மிக தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் அச்சத்தை விடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 67 சதவீதம் மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி போடாதவர்கள் அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருவதாகவும் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தங்கள் பெயர்களை முகாம்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பைட் :- திருமதி லலிதா மாவட்ட ஆட்சியர் மயிலாடுதுறை