ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் காவல் தெய்வமாகவும் கிரக தோஷங்கள் நீக்கும் வராகவும் ஆலயத்திற்கு காவலாக இருவருமாக கருதப்படும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக கார்த்திகை மாதம் கால பைரவருக்கு ஜென்ம அவதார நாளாகக் கருதப்படுவதால் கார்த்திகை காலாஷ்டமி பைரவர் பூஜை மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது காசியில் மகாசிவராத்திரி பூஜைக்கு பின்பு இன்றைய தினம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான போடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத கால ஸ்டீமி சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் கால பைரவருக்கு 21 வகையான திரவிய அபிஷேகங்களும் பஞ்சதீபம் லட்சதீபம் மகா தீப ஆராதனைகளும் சிறப்பாக நடைபெற்றன பைரவருக்கு மிகவும் பிடித்ததாக கருதக்கூடிய செவ்வரளி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 1008 எண்ணிக்கையில் கொண்ட வடைகள் மாலையாக அணிவிக்கப்பட்டு வெண்பொங்கல் மற்றும் பாயசம் பட்டியலிடப்பட்டு மிகவும் சிறப்பாக வழிபாடு நடைபெற்றது பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு பைரவரை வழிபட்டு சென்றனர்.