#MRVNEWS #கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக வினை சார்ந்த செந்தில்பாலாஜி, வேட்பு மனு தாக்கலுக்கு முன்னர் 11.00 மணிக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்கட்டும், 11.05 க்கு மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆற்றில் மணல் அள்ள கால் எடுத்து வைக்கலாம், உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள், அப்படி தடுத்தால் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லி பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்து வாக்குகள் வாங்கிய செந்தில்பாலாஜி, தற்போது மாட்டுவண்டி தொழிலாளர்களின் பிரச்சினையை மறந்து விட்டு, அதிமுக கட்சியினரை திமுக வில் சேர்க்கும் வேலையை பார்த்து வருகின்றார் என்றும், இதனால் உண்மையாக அந்த இயக்கத்தில் இருக்கும் திமுக வினர் விரக்தியில் உள்ளதாகவும், ஏன், திமுக வினரின் வாட்ச்சில் 11.05 மணி ஆகவில்லையா ? ஏன் அப்பாவி மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் பொய் வாக்குறுதிகளை கொடுத்தீர்கள் என்றும் கரூர் அடுத்துள்ள வடிவேல்நகரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.