கோவை கவுண்டம்பாளையத்தில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,
பொள்ளாச்சியில் கயிறு சார்ந்த தொழிற்சாலைகளில் அமைச்சர்களின் பெயரை குறிப்பிட்டு ஆளும் கட்சியினர் பணம் வசூலிப்பதாக வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு வைத்தார். இதுகுறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வானதி கோரிக்கை விடுத்துள்ளார். கைத்தறி நெசவு தொழில்களுக்கு ஜி.எஸ்.டி 12 % வரியை ஜி.எஸ்.டி கவுன்சில் அதிகரிக்கவுள்ள நிலையில் , தமிழகத்தில் கைத்தறி கூட்டறவு சங்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைப்பதாகவும், மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைப்பதாகவும் மாநில அரசு சார்பாக முதல்வர் கோரிக்கை வைக்க வேண்டும் கேட்டுக்கொண்டார். கேரளா, தமிழ்நாடு நீண்ட காலங்களாக சித்தாந்த அடிப்படையில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. மத ரீதியாக, மத தீவிரவாதத்தை வளர்க்கும் குழுக்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் அரசு உள்ளது. இதன் காரணமாக படுகொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது . தற்போது நடந்துள்ள படுகொலைகள் குறித்த விசாரணை என்.ஐ.ஏ நடத்த வேண்டுமென கேரளா பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார். அதையே நானும் வலியுறுத்துகிறேன். திட்டமிட்டு நடத்தப்படும் படுகொலைகளை மாநில அரசு விசாரிப்பதை விட்டுவிட்டு, வழக்கு விசாரணை என்.ஐ.ஏவிடம் கொடுக்க வேண்டும். பாஜக தலைவர்கள் மதம் மற்றும் மதரீதியான பிரச்சனைகள் பேசுவது தவறில்லை எனவும் அதில் வல்லுவராக இருப்பவர்கள் பேசட்டும் என்றார்.