இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டுள்ளனர்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக பெங்களூர் கருதப்படுகிறது. அங்கு தினசரி பயணங்களுக்கு பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பெங்களூரில் ஏராளமான எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முளைத்து வருகின்றன.
ஆனால் எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால், எந்த எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குவது? என்பதில் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. தங்களுக்கு ஏற்ற சரியான எலெக்ட்ரிக் வாகனத்தை அவர்களால் தேர்வு செய்ய முடிவதில்லை.
இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மல்டி பிராண்ட் எலெக்ட்ரிக் வாகன டீலர்ஷிப்பை, க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனம் தற்போது திறந்துள்ளது. 'ஆட்டோஇவிமார்ட்' என்ற பெயரில் பெங்களூர் நகரில், 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆம்பியர், ஆட்டோலைன், பாலன் இன்ஜினியரிங், க்ரேயான் மோட்டார்ஸ், டீடெல், ஹீரோ லெக்ட்ரோ, கோ ஜீரோ, கைனடிக், எம்எல்ஆர், ஒமேகா செய்கி மொபிலிட்டி, ரோவீட் மற்றும் வோல்ட்ரான் உள்பட பல்வேறு நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், ஆட்டோக்கள் மற்றும் ரிக்ஸாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ற தயாரிப்பை எளிதாக தேர்வு செய்ய முடியும். இங்குள்ள பயிற்சி பெற்ற ஊழியர்களும், அதிநவீன வசதிகளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்யும்.
கூடுதலாக ரோடுசைடு அஸிஸ்டன்ஸ், விரிவான சர்வீஸ் பேக்கேஜ்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஸ்பேர் பார்ட்ஸ்கள் ஆகியவற்றையும் ஆட்டோஇவிமார்ட் வழங்குகிறது. ஆட்டோஇவிமார்ட் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.