100 ஏக்கரில் விவசாயம்... நாட்டு மாடு வளர்ப்பு... அசத்தும் பட்டதாரி! | Pasumai Vikatan

Pasumai Vikatan 2022-01-19

Views 6

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ளது ஆயிப்பட்டி கிராமம். இங்கு 100 ஏக்கரில் பரந்து விரிந்து செழிப்பாகக் காட்சி அளிக்கிறது, முத்துபாப்பா இயற்கை வேளாண் பண்ணை. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு வெப்பம் தகிக்கும் வறண்ட மண். முட்புதர்கள் மண்டி, கரடுமுரடான காடாகத் திகழ்ந்த நிலம். இன்று, தென்னை, நெல்லி, சப்போட்டா, மா, வாழை, பலா, கொய்யா, நாவல், தேக்கு, பூவரசு, வேங்கை, குமிழ் தேக்கு, வேம்பு, ஈட்டி, நீர் மருது, பிள்ளை மருது, சந்தனம், வாகை, கொய்யா உள்ளிட்ட பலவகையான மரங்கள் ஆயிரக்கணக்கில் செழிப்பாக வளர்ந்து, பசுஞ்சோலையாக விளங்குகிறது.

Credits :

Reporter : K.Ramakrishan | Camera : D.Dixith | Edit : V.Srithar | Producer : M.Punniyamoorthy

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS