#MadrasBridge #NapierBridge #ChennaiBridges
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி 1639-ல் வந்திறங்குவதற்கு முன்பாக, சென்னை மிகச் சிறிய மீனவ கிராமமாக இருந்தது. சிறு சிறு துண்டுகளாக இருந்த மெட்ராஸ் நிலப்பகுதி, ஐரோப்பிய வணிகர்களின் வருகைக்குப் பிறகு ஒரு நகரமாக உருப்பெறத் தொடங்கியது.
மெட்ராஸின் மையத்தில் கூவம், அடையாறு என்ற இரண்டு நதிகள் ஓடிக்கொண்டிருந்தன. மழைக் காலங்களில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் ஆற்றைக் கடக்க, மக்கள் படகுகளைப் பயன்படுத்திவந்தனர். கோடை காலங்களில் குறைவாகச் செல்லும் முழங்கால் அளவுத் தண்ணீரில் நடந்தே மறுகரைக்குச் சென்றனர்.
மெட்ராஸ் வணிக மையமாக வளரத் தொடங்கிய பிறகு, கூவத்தின் இரு கரைகளிலும் இருந்த கிராமங்கள் ஒவ்வொன்றாக மெட்ராஸுடன் இணைக்கப்பட்டன. அன்றைக்கிருந்த தொழில்நுட்பத்தின் மூலம் சிறு மரப்பாலங்கள் கூவத்தின் மீது கட்டப்பட்டன. ஆனால் அவ்வப்போது ஏற்படும் வெள்ளம் அவற்றையெல்லாம் அடித்துச் சென்றுவிட வணிகமும் போக்குவரத்தும் தடைபட்டன.
பெரும் தலைவலியாக இது உருவெடுக்க, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் இயக்குனராக புனித ஜார்ஜ் கோட்டையை நிர்வகித்துவந்த எலுஹு யேல், கூவம் நதியில் தீவுத்திடலையும் திருவல்லிக்கேணியையும் இணைத்து ஒரு பாலம் கட்டுவதற்கான யோசனையை 1690-களில் முன்வைத்தார்.
அதுவே மெட்ராஸ் வரைபடத்தில் தோன்றிய முதல் பாலமாகும். முழு விடியோவை கண்டு கமெண்ட் செய்யுங்கள்.
ஒளிப்பதிவு: சுரேஷ் கிருஷ்ணா
படத்தொகுப்பு: ர. அபிமன்யு
குரல்: வெ.நீலகண்டன்
எழுத்து, காணொலி தயாரிப்பு: சு.அருண் பிரசாத்
Subscribe: https://goo.gl/OcERNd https://twitter.com/#!/Vikatan https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com