#MRVNEWS #கரூரில் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி மாஸ் பேச்சு | செந்தில்பாலாஜியை விளாசிய எடப்பாடி பழனிச்சாமி |

mrv news 2022-02-11

Views 0

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, எதிர்கட்சி தலைவரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், வருகின்ற நகரமைப்பு தேர்தலினை திமுக அரசு தடுத்து நிறுத்த எவ்வளவோ, முட்டுக்கட்டை போட்டது ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் நடக்கின்றது. கரூரில் உள்ள தற்போதைய திமுக அமைச்சர் எந்த கட்சியிலிருந்து வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும், பல கட்சிகளுக்கு மாறியவர், வரும் தேர்தலுக்கு எந்த கட்சியில் வேட்பாளராக இருப்பார் என்பது தெரியவில்லை, ஆனால் அதிமுக வில் இருப்பவர்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை போல், திமுக கட்சி தேய்பிறை போல் தேய்ந்து கொண்டே இருக்கின்றது. அதே போல், அதிமுக விலிருந்து திமுக விற்கு சென்ற 8 பேர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். அதிமுக வில் அடையாளம் காணப்பட்டவர்கள் தற்போது திமுக வில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினால் அடையாளம் காணப்பட்டவர்கள் தான் அனைவரும், அதிமுக விலிருந்து சென்றவர்கள் தான் திமுக வில் அமைச்சர்கள், அப்படியென்றால் திமுக வில் யாருக்கும் தகுதி இல்லையா ? ஆள்பிடிக்கு வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது. இந்த கட்சியில் அடையாளம் காட்டப்பட்டவர்கள் அங்கு சென்றுள்ளார்கள். எங்கு சென்று சேரக்கூடாதோ, அந்த இயக்கத்திற்கு சென்று சேர்ந்துள்ளார். டாக்டர் எம்.ஜி.ஆர் திமுக ஒரு தீய சக்தி என்று குறிப்பிட்டார். அதே போல் தான் இன்றும் இருந்து வருகின்றது. மேலும், அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது, தமிழக அளவில், ஏன் என் தொகுதியிலேயே சில வேட்பாளர்கள் திமுக வில் ஜெயித்தார்கள். நாங்களும் ஜனநாயக முறைப்படி தான் அவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்று அறிவித்தோம், அது தான் அதிமுக இயக்கம், ஜனநாயக முறைப்படி, நடந்து கொள்வோம், ஆனால், இங்குள்ள அமைச்சர் என்ன செய்கின்றார், யாரெல்லாம் தேர்தலில் நிற்கின்றார்களோ, அவர்களை மிரட்டுவது, போலீஸ் கொண்டு பொய் கேஷ் போடுவது. என்று செய்து வருகின்றார். அதற்கு வேறு தொழில் செய்யலாம் என்றார். தில் திராணி இருந்தால் அரசியல் ரீதியாக மோதலாம், அதை விட்டு விட்டு வேட்பாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது இதெல்லாம், ஏன், ? நான் கூட 4 ½ வருடங்களாக தமிழக முதல்வராக இருந்தேன், அப்போது காவல்துறை ஸ்காட்லாந்து போலீஸ் போல் நேர்மையான முறையில் பணியாற்றினார்கள். ஆனால் தற்போது திமுக வின் கைப்பாவையாக செயல்படுகின்றது., இந்திய நாட்டிலேயே மிகவும் திறமை வாய்ந்த இந்த காவல்துறை தற்போது திமுக அமைச்சர்களுக்கும், திமுக கட்சிக்கும் ஏவல்துறையாக செயல்பட்டு வருகின்றது. ஆகையால், நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கின்ற விதத்தில் 2024 ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும், ஆகையால் 27 அமாவாசை தான் இந்த ஆட்சி, ஆகவே ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும், ஆகையால், சிந்துத்து நடுநிலையாக காவல்துறை செயல்பட வேண்டும், மேலும், முதல்வராக எதற்கு வருகின்றோம், எதற்காக மக்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள். இப்போது உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன வேலை செய்கின்றார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS